உன் நிழல் தான்
என் முதல் உலகம்
அதில்
உன் முகம் தான்
நான் பார்த்த முதல் நிலவு
நீ தந்த
முதல் முத்ததிலிருந்து தான்
என் இதயமே
இயங்க ஆரம்பித்தது
எனக்கு
பஞ்சு தொட்டில்கள் கூட
முற்ட்தொட்டிலாக தான் தெரிந்தது
உன் மடியை தேடிய பொழுது
நான் கேட்ட
முதல் மொழி - உன்
விழி பேசிய கன்மொழி தான்
நான் மட்டும் பிறந்தன்றே
வீணைகளெல்லாம் மீட்டுவிட்டேன்
உன் விரல்களிலே....
உன் முகம் தொட்ட
பொழுதிலிருந்து தான் புரிந்துகொண்டேன்
பூக்கள் மென்மையானவை இல்லை என்பதை.....
அதுமட்டுமல்ல- உன்
முச்சுகாற்றில் மோதிய காற்று தான்
தெருவெல்லாம் தென்றலாக ஓடுகிறது
உன் முயற்ச்சியை பார்த்த
இறைவனே - ஒரு
நிமிடம் திகைத்துவிட்டான்
நடக்க வைத்த என்னை -எங்கு
பறக்க வைத்து விடுவாயோ என்று
மொத்தத்தில்
அன்பிற்க்கு கடவுள் அமைத்த
ஆலயம் தான் நீ அம்மா