மூன்று நொடியில் மூன்று வருடங்கள்







பயணத்தின் முடிவில் அமர்ந்து
முன்று வருடத்தை மெதுவாக
முணுமுணுக்கிறேன் .............

அங்கும் இங்கும் ஓடி
இறுதியில் -இந்த
முன்று வருட பயணத்தில்
முச்சு வாங்க ஏறினோம்

புதிதல்லவா
ஒருவர் முகம் ஒருவர் பார்த்து
வினாக்குரியை வரைந்து கொண்டோம்
தெரிந்த முகம் என்றால் -அது
கண்ணாடியில் மட்டும் தான்

கண்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தபோது
வார்த்தை கனைகளை தொடுத்து
மௌன கதைகளை களைத்தோம்

குண்டு ஊசி விழுந்தால்
சத்தம் கேட்க்கும் என்றிருந்த பயணத்தில்
இப்பொழுது
குண்டு விழுந்தால் கூட கேட்ப்பதிலை

நாட்கள் நட்புடன்
நடை போடுவதை பார்த்து
நாற்காலிக்கும் நாடி துடித்தது

இப்படியே
முதல் ஆண்டு
முகம் பார்த்தே முடிந்துவிட்டது

இரண்டாம் ஆண்டு என்று
சிறியதாக உடல் சிலிர்த்ததில்
சீனியர் என சீறிக் கொண்டோம்

இப்பொழுது தான்
காலவனும் தன் கடிகார முட்களை
வேகமாக சுழற்ற ஆரம்பித்தான்

தேர்வு பயம்மெல்லாம்
திமிராய் மாறியது.....

இன்னும் இருக்கும்
ஒரு வருடத்தை எட்டிபார்த்துக்கொண்டு
இளைப்பாறினோம்

எங்கள் சங்க கூட்டங்கள்
காலங்களை களவாட ஆரம்பித்தது
இரண்டாம் ஆண்டும் இறுதியானது

மூன்றாம் வருடம்
மூத்தவன் என்று கூறி
மனதில் வயதை குறைத்துக்கொண்டோம்

எங்கள் நிழல்களில்
மீதிப்பவரிடம் கூட
மீசையை முறுக்கி கொண்டோம்

வாழ்க்கையில் முன்ணேறுவதாக
சொல்லிக்கொண்டு -வாகனத்தில்
மட்டும் தான் முன்னே ஏறினோம்

இறுதியில்......................................

மூன்று வருடத்திற்க்கு
பிரிவு உபச்சார விழா என்னும்
மூன்று மணி நேர விழாவில்
முற்று புள்ளி வைக்கப்பட்டுவிட்டது
--------------------------------------

அமைதி

நுலகத்தில் ஒரே பேச்சு
பேசுபவர் பெயர்
அமைதி

மரணபயம்

கோவில் திருவிழாவில்
சீரியல்களோடு சிறைபிடிப்பு
மரணபயத்தில்
மரங்கள் ...............

இலையுதிர்க்காலம்


மரங்ளெல்லாம்
ஒன்றாய்
நிர்வாண ப்போராட்டம்
இலையுதிர்க்காம்...........

சிலைகள்


தலைவர்களே
உங்கள் ப்பை நம்பாமல்
உயிர்வரும் என காத்திருக்கிறோம் 
உடல்களோடு
ரெங்கிலும் சிலைகள்

தீயின் தீக்கனவு


கனவுகள் கன்டனரே
அதை கரிக்கினாயே- உன்
கனவு இதுதானோ!

கடிகாரம்


றப்பே ல்லாமல்
இரவையும் பகலையும்-ளிதாய்
புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும்
புரட்சியான்!

புலம்பல்


நம்ப வைத்து
கழுத்தை அறுத்துவிட்டன்ர்
புலம்புகிறது
நெற்பயிர்

சாக்பீஸ்


அறியாமை அகல
தினமும் போராடி உயிர்விடும்
கிம்சைவா திகள்
சாக்பீஸ்