ஊழல் தலமையின்
பாவங்களை
பங்கு போடுபவதில்
முதல்வன்
தலைவனின்
அகம் அறியாது
புறம் கொண்டாடுவதில்
ரசிகன்
சமூக அறம்
அறிந்தும் அறியாது
அலையும்
அரக்கன்
எவனோ ஏற்றும்
வெறுப்பு குவியலில்
தானே போய் - தினம்
வீழ்பவன்
ஒவ்வொரு
தேர்தலுக்கு மட்டும்
வந்து சாமியாடும்
சாமானியன்
இவனே
தொண்டன்