இரயிலோடு பயணங்களில்










மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது
தெய்வத்தைக் கண்ட
திருவிழாக் கூட்டமாய்
இவன் நிற்க்கும் இடம்மெல்லாம்..........

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தை
இவன் அன்போடு அனைக்கும் போது
என் பார்வையில் - ஒரு
அன்னையாகவே அறியப்பட்டான்

தண்டவாளத்தோடு இவன்
மீட்டும் இசையினிலே
இருபுறமும் மரங்களெல்லாம்
கைகோர்த்து செல்கிறது பின்னோக்கி

குயிலுக்கு குருவாக இருப்பானோ
வழியெல்லாம் கூவி கூவியே
குதுகலிக்கிறான்....

உலகத்து முதற்தாயிற்க்கு
தாலாட்டு கற்ப்பிக்கும் பொழுது
உடன் இருந்திருப்பான் போலிருக்கு

இவன் உற்சாகத்திற்க்கு
உரம் போட்டவன் அதில்
ஒரு துளியை
எனக்கு தரமான்டானோ?

வானத்தில்
மிதக்கும் மேகமெல்லாம்
இவன் முதுகேற துடுக்கிறது

இவன் மடியிறங்க
எவருக்குத்தான் மனமுண்டு
எனக்கும் ஒருதுளி கூட இல்லை
கண்மூடி கொண்டு சந்தோசத்தின்
கரையேறிவிட்டேன்........

இறுதிவரை ஜன்னல் வழிவந்து
தேடிய தென்றலின் தேடல்
காரணம் தான் தெரியவில்லை....................

1 comment:

Anonymous said...

அருமையான கவிதயுணர்வோடு நானும் பயணித்தேன்.

ரசித்தேன்.

வாழ்த்துக்கள்