மழையால் எத்தனை மகிழ்ச்சி!








உருண்டோடிய மேகமெல்லாம்
இளைப்பாறிய நேரத்தில் - சுரந்த
வியர்வை துளியெல்லாம்
மண்ணை தொட்டுவிட்டது
மழைத்துளியாய்............


இவன் பூமி இறங்கிய
மகிழ்ச்சியில் மலர்ந்தது
மலர் மட்டுமல்ல மண்ணும் தான்
மலராமல் இப்படி மணக்குமா?

சந்தோசத்தில்
தென்றல் தெருவெல்லாம்
பரப்புகிறது இவன் வந்த சேதியை

இவன் பாதம் தொட்ட
பாதையெல்லாம்
பசுமை படர்ந்து போகையால்
வறட்சியெல்லாம் வறண்டேபோகிறது

சொட்டு சொட்டு என்ற
இவன் சங்கீதம் கேட்டு-மண்ணில்
புதைந்திருந்த விதையெல்லாம்
புதுதளிர் விட்டு சிரிக்கிறது

விதவையாய் இருந்த ஓடையெல்லாம்
இவன் வந்த பொழுதிலிருந்து-இன்று
மணம்புரிந்த பாவையாய்
சல சலக்கிறது மகிழ்ச்சியில்

கரும்பாறையோ கொஞ்சம் கலங்குகிறது
இவன் தொட்ட சுகத்தில் - எங்கு
தன்னை மறந்து கரைந்திடுவோமோ என்று.....

இவனிடம் நனைந்த மயக்கத்தில்
உயிர்களும் பொழுதுகளும்
உறங்கியே கிடக்கிறது-இவன்
சென்ற நேரம் கூட தெரியாமல்...

விழித்திடுமா அவைகள்?

4 comments:

Anonymous said...

very nice

Anonymous said...

விதவையாய் இருந்த ஓடையெல்லாம்
இவன் வந்த பொழுதிலிருந்து-இன்று
மணம்புரிந்த பாவையாய்
சல சலக்கிறது மகிழ்ச்சியில்

priyamudanprabu said...

nice

Unknown said...

மகிழ்ச்சி!!