அனுபவம் எனும் பெரும்கடலில்
அலை அலையாய் அலைந்துவிட்டு
அலை இல்லா ஓரிடத்தில்
இறுகி கிடக்கும் மிதவை அது
முழு வாழ்க்கையும் வாழ்ந்து
முழுங்கியதில்
கண் இரண்டும் விரிந்து இருக்கும் !!
கால் நடைகள் கொஞ்சம் தளர்த்திருக்கும் !!
குழந்தை
தன் குழந்தை
தன் குழந்தையின் குழந்தை - என
மூன்று தலைமுறை மூத்ததுக்கு
எப்படி ஏற்கிறதோ மனது
குழந்தையோடு குழந்தையாவதற்கும் !!
தெரியாது ஏதும் உனக்கு - என
தெரியாமல் சொல்லும் அந்த சிறுவனுக்கு - தினம்
அவன் மகிழ்ந்து வாழும் வாழ்க்கை எது
நீ போட்ட சாலை அது !!
தெய்வம் ஏதும் கண்டதில்லை
நீ தெய்வமாய் எதையும் முழுவதாய்
கொண்டதுமில்லை !!
நீங்கள்
முதுமை இல்லை
முழுமை...
முதுமை இல்லை
முழுமை...
No comments:
Post a Comment