கட்சி தொண்டன்












ஊழல் தலமையின் 

பாவங்களை

பங்கு போடுபவதில் 

முதல்வன்


தலைவனின்

அகம் அறியாது

புறம் கொண்டாடுவதில்

ரசிகன்


சமூக அறம்

அறிந்தும் அறியாது

அலையும் 

அரக்கன்


எவனோ ஏற்றும்

வெறுப்பு குவியலில்

தானே போய் - தினம்

வீழ்பவன்


ஒவ்வொரு

தேர்தலுக்கு மட்டும்

வந்து சாமியாடும்

சாமானியன் 


இவனே

தொண்டன்

தேர்தல்









முதலில் தேதி வரும் !


பின்னால் ஓலையிட்டு

தெரு தெருவாய் நரிகள் வரும் !

கூடவே வாலாட்டி நாய்களும் வரும் !


ஒரு கூட்டம்

விலை போகி இறையாக

சிறு முயலாகும் !


அப்பாவி

பெருங்கூட்டம்

வீண் பேசி இணையத்தில்

வாள் வீசும் !


ஒலி பெருக்கி

ஓய்வில்லாமல் ஊரெல்லாம்

பொய் பெருக்கும் !


கரை வேட்டி

கைக்குழந்தைகள்

புரிந்தாலும் புரியாமல்

புகழ்பாடும் !


தேர்தல்

அறம் கொண்டு

இழுக்க வேண்டி நிற்கும்

பெருங்களிராகும் !


அதை

செய்து முடிக்க

ஒரே ஒரு விரல் போதும் !


புகைப்படம்




உறைந்த  

என் துளி பொழுதுகள் 

உலர்கிறது முகநூலில்  

புகைப்படம்

திருஷ்டி பொம்மைகள்


அழகிய
கிராமத்தின்
திருஷ்டி பொம்மைகள்
உயர்ந்த மாடி வீடுகள்

இரவின் கண்கள்


இரவுக்கும் கண்கள்
உண்டு - ஆனால் அது
கனவுகளை
மட்டும் தான் காணும்

விழிப்பு



மறப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகம் - கொஞ்சம்
ஒத்திகை மட்டும் நியாபகம் வரும் 
மீண்டதும்...

உலக படைப்பு


பத்து திங்கள் மட்டும் எடுக்கும்
அவள் படைக்க - அறிவியல்
பல நூறு ஆண்டு கூராய்வு
போதவில்லை அதை படிக்க .

கனவு


மறப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகம் - கொஞ்சம்
ஒத்திகை மட்டும் நியாபகம் வரும் 
மீண்டதும்.

மரம்


வேரில் மண்ணை கட்டி இழுத்து
விண்ணை பிடிக்க 
தினம் முயலும் பெரும்முயற்சி
மரம்

மனிதன் 
எவ்வளவு உயர்ந்தாலும்
உயரமுடியாது அவ்வளவு..

முழுமை















அனுபவம்  எனும் பெரும்கடலில் 
அலை  அலையாய்  அலைந்துவிட்டு 
அலை இல்லா  ஓரிடத்தில் 
இறுகி கிடக்கும் மிதவை அது 

முழு வாழ்க்கையும் வாழ்ந்து 
முழுங்கியதில் 
கண் இரண்டும் விரிந்து இருக்கும் !! 
கால் நடைகள் கொஞ்சம்  தளர்த்திருக்கும் !!

குழந்தை 
தன் குழந்தை 
தன் குழந்தையின் குழந்தை -  என 
மூன்று தலைமுறை மூத்ததுக்கு 
எப்படி ஏற்கிறதோ மனது 
குழந்தையோடு  குழந்தையாவதற்கும்  !!

தெரியாது ஏதும்  உனக்கு - என 
தெரியாமல் சொல்லும் அந்த  சிறுவனுக்கு - தினம்  
அவன் மகிழ்ந்து வாழும் வாழ்க்கை எது  
நீ போட்ட சாலை அது !!

தெய்வம் ஏதும் கண்டதில்லை 
நீ தெய்வமாய் எதையும் முழுவதாய் 
கொண்டதுமில்லை !! 

நீங்கள்
முதுமை இல்லை
முழுமை...

கட்சி

ஒற்றை சித்தாந்தம்
வாழ்க்கை முழுவதும் - அதன்
பழியையும் புகழையும்
தூக்கி பிடிக்க
ஒரு கூட்டம்

இப்படிக்கு என் மனம்





















சமுகத்தில்
பாசாங்கு செய்தல் வேண்டும்

துன்பம் வரும் போது கொஞ்சம்
துவண்டு போதல் வேண்டும்
பாவம் என்பர் .. இரக்கம் கொள்வர் ..

இன்பம் வரும் போது
துள்ளல் கொள்தல் வேண்டும்
நம் கைகோர்பர் .. கட்டித்தளுவர் ...

நானாக நான் இருப்பேன்
துன்பத்தை இன்பமாய் கடப்பேன் என்றால்
பைத்தியம் என்பர் ..புத்திமதி சொல்வர் ..

சரிதானா ???

விலகி நில்லுங்கள்
என் மனதை  கண்டுகொள்ளவிடுங்கள்....

இப்படிக்கு என் மனம்

பள்ளி வாகனம்

பள்ளி வாகனம்

பூ கூடையில் 
குலுங்கும் பூக்களாய் 
குழந்தைகள் !

மழையால் எத்தனை மகிழ்ச்சி!








உருண்டோடிய மேகமெல்லாம்
இளைப்பாறிய நேரத்தில் - சுரந்த
வியர்வை துளியெல்லாம்
மண்ணை தொட்டுவிட்டது
மழைத்துளியாய்............


இவன் பூமி இறங்கிய
மகிழ்ச்சியில் மலர்ந்தது
மலர் மட்டுமல்ல மண்ணும் தான்
மலராமல் இப்படி மணக்குமா?

சந்தோசத்தில்
தென்றல் தெருவெல்லாம்
பரப்புகிறது இவன் வந்த சேதியை

இவன் பாதம் தொட்ட
பாதையெல்லாம்
பசுமை படர்ந்து போகையால்
வறட்சியெல்லாம் வறண்டேபோகிறது

சொட்டு சொட்டு என்ற
இவன் சங்கீதம் கேட்டு-மண்ணில்
புதைந்திருந்த விதையெல்லாம்
புதுதளிர் விட்டு சிரிக்கிறது

விதவையாய் இருந்த ஓடையெல்லாம்
இவன் வந்த பொழுதிலிருந்து-இன்று
மணம்புரிந்த பாவையாய்
சல சலக்கிறது மகிழ்ச்சியில்

கரும்பாறையோ கொஞ்சம் கலங்குகிறது
இவன் தொட்ட சுகத்தில் - எங்கு
தன்னை மறந்து கரைந்திடுவோமோ என்று.....

இவனிடம் நனைந்த மயக்கத்தில்
உயிர்களும் பொழுதுகளும்
உறங்கியே கிடக்கிறது-இவன்
சென்ற நேரம் கூட தெரியாமல்...

விழித்திடுமா அவைகள்?

இரயிலோடு பயணங்களில்










மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது
தெய்வத்தைக் கண்ட
திருவிழாக் கூட்டமாய்
இவன் நிற்க்கும் இடம்மெல்லாம்..........

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தை
இவன் அன்போடு அனைக்கும் போது
என் பார்வையில் - ஒரு
அன்னையாகவே அறியப்பட்டான்

தண்டவாளத்தோடு இவன்
மீட்டும் இசையினிலே
இருபுறமும் மரங்களெல்லாம்
கைகோர்த்து செல்கிறது பின்னோக்கி

குயிலுக்கு குருவாக இருப்பானோ
வழியெல்லாம் கூவி கூவியே
குதுகலிக்கிறான்....

உலகத்து முதற்தாயிற்க்கு
தாலாட்டு கற்ப்பிக்கும் பொழுது
உடன் இருந்திருப்பான் போலிருக்கு

இவன் உற்சாகத்திற்க்கு
உரம் போட்டவன் அதில்
ஒரு துளியை
எனக்கு தரமான்டானோ?

வானத்தில்
மிதக்கும் மேகமெல்லாம்
இவன் முதுகேற துடுக்கிறது

இவன் மடியிறங்க
எவருக்குத்தான் மனமுண்டு
எனக்கும் ஒருதுளி கூட இல்லை
கண்மூடி கொண்டு சந்தோசத்தின்
கரையேறிவிட்டேன்........

இறுதிவரை ஜன்னல் வழிவந்து
தேடிய தென்றலின் தேடல்
காரணம் தான் தெரியவில்லை....................

அம்மா....








உன்
நிழல் தான்
என் முதல் உலகம்
அதில்
உன் முகம் தான்
நான் பார்த்த முதல் நிலவு

நீ தந்த
முதல் முத்ததிலிருந்து தான்
என் இதயமே
இயங்க ஆரம்பித்தது

எனக்கு
பஞ்சு தொட்டில்கள் கூட
முற்ட்தொட்டிலாக தான் தெரிந்தது
உன் மடியை தேடிய பொழுது

நான் கேட்ட
முதல் மொழி - உன்
விழி பேசிய கன்மொழி தான்

நான் மட்டும் பிறந்தன்றே
வீணைகளெல்லாம் மீட்டுவிட்டேன்
உன் விரல்களிலே....

உன் முகம் தொட்ட
பொழுதிலிருந்து தான் புரிந்துகொண்டேன்
பூக்கள் மென்மையானவை இல்லை என்பதை.....

அதுமட்டுமல்ல- உன்
முச்சுகாற்றில் மோதிய காற்று தான்
தெருவெல்லாம் தென்றலாக ஓடுகிறது

உன் முயற்ச்சியை பார்த்த
இறைவனே - ஒரு
நிமிடம் திகைத்துவிட்டான்
நடக்க வைத்த என்னை -எங்கு
பறக்க வைத்து விடுவாயோ என்று

மொத்தத்தில்
அன்பிற்க்கு கடவுள் அமைத்த
ஆலயம் தான் நீ அம்மா

தூக்கம் வரவில்லை

தூக்கம்
என்னை மறந்து
தூங்கிவிட்டது
தூக்கம் வரவில்லை..........

நல்ல உறவுகள்


நல்ல உறவுகள்
உறுதிப்படுத்தப்படுகிறது
சுபநிகழ்ச்சி மொய்ஏட்டை பார்த்து

மூன்று நொடியில் மூன்று வருடங்கள்







பயணத்தின் முடிவில் அமர்ந்து
முன்று வருடத்தை மெதுவாக
முணுமுணுக்கிறேன் .............

அங்கும் இங்கும் ஓடி
இறுதியில் -இந்த
முன்று வருட பயணத்தில்
முச்சு வாங்க ஏறினோம்

புதிதல்லவா
ஒருவர் முகம் ஒருவர் பார்த்து
வினாக்குரியை வரைந்து கொண்டோம்
தெரிந்த முகம் என்றால் -அது
கண்ணாடியில் மட்டும் தான்

கண்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தபோது
வார்த்தை கனைகளை தொடுத்து
மௌன கதைகளை களைத்தோம்

குண்டு ஊசி விழுந்தால்
சத்தம் கேட்க்கும் என்றிருந்த பயணத்தில்
இப்பொழுது
குண்டு விழுந்தால் கூட கேட்ப்பதிலை

நாட்கள் நட்புடன்
நடை போடுவதை பார்த்து
நாற்காலிக்கும் நாடி துடித்தது

இப்படியே
முதல் ஆண்டு
முகம் பார்த்தே முடிந்துவிட்டது

இரண்டாம் ஆண்டு என்று
சிறியதாக உடல் சிலிர்த்ததில்
சீனியர் என சீறிக் கொண்டோம்

இப்பொழுது தான்
காலவனும் தன் கடிகார முட்களை
வேகமாக சுழற்ற ஆரம்பித்தான்

தேர்வு பயம்மெல்லாம்
திமிராய் மாறியது.....

இன்னும் இருக்கும்
ஒரு வருடத்தை எட்டிபார்த்துக்கொண்டு
இளைப்பாறினோம்

எங்கள் சங்க கூட்டங்கள்
காலங்களை களவாட ஆரம்பித்தது
இரண்டாம் ஆண்டும் இறுதியானது

மூன்றாம் வருடம்
மூத்தவன் என்று கூறி
மனதில் வயதை குறைத்துக்கொண்டோம்

எங்கள் நிழல்களில்
மீதிப்பவரிடம் கூட
மீசையை முறுக்கி கொண்டோம்

வாழ்க்கையில் முன்ணேறுவதாக
சொல்லிக்கொண்டு -வாகனத்தில்
மட்டும் தான் முன்னே ஏறினோம்

இறுதியில்......................................

மூன்று வருடத்திற்க்கு
பிரிவு உபச்சார விழா என்னும்
மூன்று மணி நேர விழாவில்
முற்று புள்ளி வைக்கப்பட்டுவிட்டது
--------------------------------------

அமைதி

நுலகத்தில் ஒரே பேச்சு
பேசுபவர் பெயர்
அமைதி